நேற்றும்(08) இன்றும்(09) கடமைக்கு சமுகமளித்த நிறைவேற்றுத்தரம் அல்லாத அனைத்து  அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வை வழங்குவதற்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்கு பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டு சான்றிதழை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  Read more
		    
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு தெரிவித்து கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிஞ்சாம்பிட்டியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 
பாராளுமன்ற உறுப்பினர்களின் சில உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பொதுமக்களின் நீதிமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். நீதிமன்றத்தின் ஒருசில நடவடிக்கைகளால் தமது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்திலும் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் தொடர்பிலேயே பிரதம நீதியரசர் இதனை அறிவித்துள்ளார்.  
மாங்குளம் பனிச்சங்குளம் கலைமகள் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் கட்சியின் பொருளாளர் க. சிவநேசன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், முள்ளியவளை மேற்கு வட்டார பொறுப்பாளர் சஞ்சீவன், முன்பள்ளியின் முதன்மை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதன்போது கட்சியினால் பிள்ளைகளுக்கான பரிசுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தின 35ஆவது ஆண்டு நினைவுகள் ஜூலை 13ம் திகதிமுதல் ஜூலை 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கதிரவேலு சண்முகம் குகதாசன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கதிரவேலு சண்முகம் குகதாசன்  நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் அவர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.