புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு தெரிவித்து கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிஞ்சாம்பிட்டியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஆஜராகுவதை பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ச்சியாக புறக்கணித்துவந்த நிலையில் அவருக்கு எதிராக நேற்று(08) பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.