யாழ். கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் விளையாட்டு நிகழ்வு 12.07.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர் சு.பிறேமன் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
		    
அரசியலமைப்பு சதிகளின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலுக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்களை தடுக்குமாறு கோரியும் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஞ்சித் மத்தும பண்டார, ரவூப் ஹக்கீம், உதய கம்மன்பில, அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட 30 பேரின் கையொப்பங்களுடன் இந்தக் கடிதம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 
12.07.2006இல் யாழில் மரணித்த தோழர் வோல்ரர்) (செபஸ்ரியான் இருதயராஜன்- யாழ்ப்பாணம்) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று  காலை நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் நிலவும் அரச வெற்றிடங்கள், காணி விடுவிப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் குருநகரில் தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் இருவர் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். துபாய்க்கு சென்ற குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், 2 குற்றவாளிகளையும் இன்று காலை நாட்டிற்கு அழைத்து வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். கங்கானம்கே திமுத்து சதுரங்க பெரேரா மற்றும் களுந்துர தினேஷ் ஷியமந்த டி சில்வா ஆகிய 2 குற்றவாளிகளே துபாயிலிருந்து அழைத்து வரப்பட்டனர். 
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.