தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 35வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இன்று (13.07.2024) காலை 09.30 மணியளவில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கழகத்தின் கொடி மாவட்ட அமைப்பாளர் தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
		    
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 35ஆவது நினைவு தினம் இன்று காலை (13.07.2024) வலிகாமம்-மேற்கு பிரதேசசபை வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவுருவச் சிலையின் முன்பாக இடம்பெற்றது.
13.07.1989ல் மரணித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளும் 35ஆவது வீரமக்கள் தின ஆரம்ப நாளும் இன்று….
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தின 35ஆவது ஆண்டு நினைவுகள் இன்று 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.
119ஆவது சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளைத் திறந்த வெளியில் சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அன்றைய தினம் கைதிகளைப் பார்வையிட வருபவர்கள் அவர்களுக்கான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அந்தக் கட்சியின் சகல பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றக் குழுக் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்கு இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா முன்வைத்த விமர்சனங்கள் மற்றும் அவரது செயற்பாடுகளைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.