புளொட் அமைப்பு வருடந்தோறும் அனுஸ்டித்து வருகின்ற வீரமக்கள் தினத்தின் 35ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு சுவிஸ் நாட்டிலும் நடைபெற்றுள்ளது. செயலதிபர் அமரர் தோழர். உமாமகேஸ்வரன், கழகக் கண்மணிகள், அனைத்து அமைப்புக்களின் தலைவர்கள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்களை நினைவு கூர்ந்து சுவிஸில் நடைபெற்ற 35ஆவது வீரமக்கள் தின நினைவேந்தல் நிகழ்வானது, 13.07.2024 சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் (13.00) கேர்ளபிங்கன் 4563 4563 Gerlafingen எனும் இடத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கழக சுவிஸ் தோழர்கள், தோழர்களின் குடும்பத்தினர் மற்றும் கழக ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
