தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் குழுவொன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நாளை செல்லவுள்ளது. குறித்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வடக்கு சுகாதாரத்துறையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தார். Read more
		    
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் கைவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்) அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (15.07.2024) மாலை அவர் மற்றும் அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன் ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
15.07.1983இல் வவுனியாவில் மரணித்த தோழர் கிறிஸ்டி (இ.வசந்தராஜா- திருகோணமலை) அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
15.07.1998இல் மரணித்த கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்), அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன், மைத்துனர் தாசியஸ் ஸ்டெனிஸ் லொஸ் மற்றும் மெய்க்காவலர்களான நோயல் ஹெட்டியாராய்ச்சி, சரத் வீரசேகர ஆகியோரின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஊடாக கரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சமூக மட்ட அமைப்புகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. நிகழ்வில் பிரதேச செயலாளர், முன்னாள் வடமகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் அ.கௌதமன், கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யுகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.  2015ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கமைய, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அதனை மக்கள் கருத்துக்கணிப்பினூடாக நிறைவேற்றுவது அவசியமென குறிப்பிடப்படவில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று மீளவும் வலியுறுத்தியுள்ளது.  
மன்னாரின் முருங்கன் பிரதேசத்தில் 15.07.2024 திங்கட்கிழமை காலை புளொட் அமைப்பின் 35ஆவது வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ச.யோகானந்தராசா, தோழர் சிவசம்பு மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவையும் பிரதமராக நாமல் ராஜபக்சவையும் நியமிப்பதற்கு ராஜபக்ச குடும்பத்தினர் இணங்கியுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா என்பது உறுதியாகியுள்ளதாக உதயங்க வீரத்துங்க தெரிவித்துள்ளார்.