கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்) அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (15.07.2024) மாலை அவர் மற்றும் அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன் ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கட்சியின் தேசிய அமைப்பாளர் பீற்றர், கட்சியின் தொழிற்சங்கப் பிரிவு பொறுப்பாளர் சு.காண்டீபன், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சிவம், தோழர்கள் ராஜா, சிவா, சுகந்தன், ஓசை மற்றும் சிம்சுபன் உள்ளிட்டோரும், தோழர் வசந்தன் அவர்களுடைய குடும்ப உறவுகளும் கலந்து கொண்டிருந்தனர்.