ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவையும் பிரதமராக நாமல் ராஜபக்சவையும் நியமிப்பதற்கு ராஜபக்ச குடும்பத்தினர் இணங்கியுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா என்பது உறுதியாகியுள்ளதாக உதயங்க வீரத்துங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்துக்குள் இதற்கான தீர்மானம் இறுதியாகியுள்ளது. அத்துடன், பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவின் பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க என்பவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிரி ஸ்தானத்தில் இருக்கும் ஒருவராவார்.அவர் ஒருபோதும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படமாட்டார்.

எதிர்வரும் தேர்தலிலும் அவர் போட்டியிடுவார் என்றும் கூறமுடியாது.

எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேராவே என்பது முழுமையாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரத்துங்க தெரிவித்துள்ளார்.