Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் (16.07.2024) மாலை 4.00அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க. சந்திரகுலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.

Read more

தோழர் போல் அவர்களின் இறுதி நிகழ்வு லண்டனில் இன்று நடைபெற்றுள்ளது. இறுதி நிகழ்விலும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைதியற்ற வகையில் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, கூட்டத்திலிருந்த ஒருவர் கலந்துரையாடலை பேஸ்புக் வழியாக நேரலையில் ஒளிபரப்பியிருந்தார். Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்ரூnடிளி;சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்ட அவர், தேர்தலை மிகக் குறுகிய காலத்திற்குள் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளால் ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனுவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.