தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் எங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் விடயம் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் 16.07.2024 மாலை இடம்பெற்ற வீரமக்கள்தின நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
		    
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகப் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் குறித்த சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத் துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் பாதிப்படைந்த சிலர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரரால் சமர்ப்பிக்கப்பட்ட மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  
திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வது தொடர்பாக புதிய சட்டம் இயற்ற வேண்டும் எனத் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைப்பேசிகளை எடுத்துச் செல்வதைத் தடுக்க புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது. அது தொடர்பில் திரைப்படக் கூட்டுத்தாபனம் தலையிட்டுத் தேவையான சட்ட ஏற்பாடுகளைத் தயாரிக்க வேண்டுமென அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவைப் பிறப்பிக்குமாறு அந்த மனுவின் ஊடாக கோரப்பட்டுள்ளது.