Header image alt text

18.07.2024 மாங்குளம் கிழவன்குளம் அலைமகள் முன்பள்ளி வற்றாப்பளை உதயசூரியன் முன்பள்ளி என்ற இரண்டு முன்பள்ளிகளையும் சேர்ந்த 50 மழலைகளுக்கு விளையாட்டு போட்டியை முன்னிட்டு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்தப் பரிசுப்பொருட்கள் ஜேர்மனியில் லூட்விக்ஸ் பேர்த் நகரில் வசிக்கும் பவுர்ணியா பவானந் அவர்களின் 27வது பிறந்தநாளை கொண்டாடும் முகமாக அவர்களது குடும்பத்தவர்களால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்டது. இவ்வைபத்தில் கரைதுறைப்பற்று முன்னாள் தவிசாளர் கனக தவராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் முள்ளியவளை மேற்குப் பொறுப்பாளர் சஞ்சை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

மூதூர் கங்கை பாலத்திலிருந்து பஸ்ஸொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் வரை காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை சென்றவர்கள் பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளானதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். பஸ் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 54 பேர் அதில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிங்குரக்கொட உள்ளூர் விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்தப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில்இ நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. Read more

22ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்பின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 19ம் திருத்தச் சட்டத்தின் 83ஆம் உறுப்புரையின் (ஆ)பிரிவில் திருத்தங்களை ஏற்படுத்த அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, குறித்த சட்டமூலம் வரையப்பட்டிருந்தது. இதனை வர்த்தமானியில் பிரசுரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கிய இருந்த போதும், ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரையில் அவ்வாறு பிரசுரிக்காதிருக்க நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவுறுத்தியிருந்தார். Read more

எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விடயங்களை முன்வைக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொழும்பு 10 – டி.பி ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தை கடந்த 5 ஆம் திகதி பூட்டி வைத்தமை தொடர்பிலேயே மாளிகாகந்த நீதவான் லோச்சனீ அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். Read more

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக இன்று பெரும்பாலானோர் வருகை தந்ததால் பத்தரமுல்லை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இன்றைய தினத்தை முன்கூட்டியே பதிவு செய்யாமல் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு பலர் வருகை தந்ததால் இந்நிலைமை ஏற்பட்டது. விண்ணப்பதாரர்களின் நலனுக்காகவும் செயல்முறையை சீரமைக்கவும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை குடிவரவு – குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கிணங்க இன்று முதல் கடவுச் சீட்டு வழங்கும் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read more