வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துஇ ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்படி தொழில் செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில்இ கல்வி அமைச்சர் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் நேற்று கலந்துரையாடியிருந்தது. இந்த நிலையில்l பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையினால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்படி தொழில் செய்யும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
		    
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடந்த நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சகராக பணியாற்றிய இராமநாதன் அர்ச்சுனா அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் சில முறைகேடுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தார். 
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார். கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று அவர் கற்பிட்டி காவல்துறையில் சட்டத்தரணியுடன் சரணடைந்த போது கைது செய்யப்பட்டதாகக் கற்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அவரைக் கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.