புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார். கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று அவர் கற்பிட்டி காவல்துறையில் சட்டத்தரணியுடன் சரணடைந்த போது கைது செய்யப்பட்டதாகக் கற்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அவரைக் கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிந்தைய செய்திகளின் படி, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம், புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி முன்னிலையாகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்ரஸா பாடசாலையொன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பான வழக்கொன்றில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைய அவர் இன்று(20) முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.