Header image alt text

சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிட்டபடி நாளை ஆரம்பிக்கப்படும் என ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வேதன முரண்பாடு தொடர்பில் கடந்த 9ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளது. Read more

இலங்கைத் தரப்பிலிருந்து காணிகள் விடுவிக்கப்படாமையின்ர காரணமாகவே இந்திய வீடமைப்பு திட்டம் தாமதமடைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். Read more

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அதற்கான வழிவகைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த தூதுக்குழு இலங்கை வரவுள்ளது. எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த தூதுக்குழு நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டம் தொடர்பில் மதிப்பாய்வை மேற்கொள்ளாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.