Header image alt text

ஜனநாயகக் கட்சியை ஓரணியாகத் திரட்டி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்பை தோற்கடித்து வீழ்த்திக் காட்டுவோம் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் சூளுரைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பைடன் விலகியதுடன் கமலா ஹரிஸை முன்னிறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 35ஆவது வீரமக்கள் தினம் பிரான்சில் இன்று தோழர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு தோழர்களின் உருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிக்வில் தோழர்கள் ஜெயந்தன் சசி முல்லை, சசி வவுனியா, தயா மட்டு, தயா வவுனியா, உதயன், தீபன், சுதா, ரங்கா, யூட் யேர்மன் மற்றும் கயூரன்்ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள.

Read more

புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கும், தமிழ் மக்கள் பொதுச்சபை பிரதிநிதிகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் யாழ் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டது. மேற்படி இரு தரப்பினரின் இணைவில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

Read more

தேசிய கண் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர் உடனடியாக பதவி நீக்கப்படாவிட்டால் நாளை (23) காலை 8 மணிமுதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வைத்தியரின் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகள் காரணமாக அவரை பதவி நீக்குமாறு கோருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

கண்ணாட்டி கணேசபுரம் கிராமத்தில் உள்ள திருநாவுக்கரசு முன்பள்ளிச் சிறார்களுக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அங்குள்ள குழாய்க் கிணறுக்கான மோட்டர் இயந்திரம் மற்றும் அதற்குரிய வயர் உள்ளிட்ட உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டது. கனடாவில் வசிக்கும் செல்வி. அஷ்ரா குலசேகரம் அவர்களின் 10வது பிறந்தநாளை (21.07.2024) முன்னிட்டு மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.

Read more