Header image alt text

கறுப்பு யூலையின் 41ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை 23ம் திகதியாகிய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையிலான ஐந்து நாட்களாகும். வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது.

Read more

23.07.2008இல் மரணித்த தோழர் சுரேஸ் (மூக்கன் சுரேஸ்குமார்) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றியிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பதவித்தரம் இறக்கப்பட்டு வைத்திய அதிகாரியாக தற்காலிகமாக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக அவர் கடமையாற்றியிருந்த போது அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தார். எனினும் அவர் தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதாகத் தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சாவகச்சேரி கிளை உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர். Read more

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். விடைத்தாள் மதிப்பீட்டிற்கான அனைத்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் பிரச்சினை தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. Read more

இலங்கை தொழிலாளர்களுக்குக் குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனது ‘எக்ஸ்’ தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.