41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜூலை கலவரம் தொடர்பில் தமிழ் மக்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அரசாங்கத்தின் சார்பில் நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மன்னிப்பு கோரியுள்ளார். 1983ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி இலங்கை ஒரு மோசமான சம்பவத்தை எதிர்கொண்டது. நாம் அந்தக் காலத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை.
எனினும் நாட்டின் பிரஜை என்ற வகையிலும் சட்டத்தை மதிப்பவன் என்றவகையில் தாங்கள் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.