26.07.2003இல் மரணித்த தோழர் டெய்லர் (சுப்ராயன் கந்தசாமி – வவுனியா) அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 26 July 2024
						Posted in செய்திகள் 						  
26.07.2003இல் மரணித்த தோழர் டெய்லர் (சுப்ராயன் கந்தசாமி – வவுனியா) அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 26 July 2024
						Posted in செய்திகள் 						  
26.07.1990இல் சென்னையில் மரணித்த தோழர் இந்து (முத்துவேலு அழகேஸ்வரன்) அவர்களின் 34ஆவது நினைவுநாள் இன்று..
Posted by plotenewseditor on 26 July 2024
						Posted in செய்திகள் 						  
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த பிரதி அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்று முதல் அமுலாகும் வகையில் அவர்கள் தேர்தல் கடமைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 26 July 2024
						Posted in செய்திகள் 						  
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன் பதிவு செய்துகொள்ள முடியும்.
Posted by plotenewseditor on 26 July 2024
						Posted in செய்திகள் 						  
Posted by plotenewseditor on 26 July 2024
						Posted in செய்திகள் 						  
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டமையை அமெரிக்கா வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பதிவொன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரஜைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Posted by plotenewseditor on 26 July 2024
						Posted in செய்திகள் 						  
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் 2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடத்தப்படும் என தேரதல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஒகஸ்ட் 15ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக இன்று முதல் ஒகஸ்ட் 15 ஆம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்தமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Posted by plotenewseditor on 26 July 2024
						Posted in செய்திகள் 						  
ஜனாதிபதித் தேர்தல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளது. ஒகஸ்ட் 15ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக இன்று முதல் ஒகஸ்ட் 15 ஆம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்தமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது