27.07.1983இல் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட காந்தீயத்தின் செயலாளராக செயற்பட்டு, ஏதிலிகள் குறித்த கழகத்தின் எண்ணங்களை செயல் வடிவமாக்கிய வைத்தியர் தோழர் இராஜசுந்தரம் மற்றும் தோழர்கள் ரொபேட் , சேயோன், மயில்வாகனம், சுதாகரன், அரபாத், அன்பழகன் ஆகியோரின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
		    
28.07.2011இல் மரணித்த தோழர் கண்ணாடிச் சந்திரன் (கேசவன் ரவீந்திரன்) அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
காவல்துறை மா அதிபரின் பதவி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை சபாநாயகரும் பிரதம நீதியரசரும் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெல்வோம் ஸ்ரீ லங்கா நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை தொடர்பில்இ உயர் நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது. இதனையடுத்து அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி மேற்கொண்ட நியமனங்களை உயர்நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்தது.
தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளரை தெரிவத்தாட்சி அலுவலர்களாக நியமித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடல் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கா கல்பனீ லியனகே தெரிவித்துள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணத்துடன் தொடர்புடைய ஆவணங்களை அச்சிடும் பணிகளை அரச அச்சகம் பூர்த்தி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கு முன்னதான காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் பொறுப்பாகும் என Paffrel அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் பிரசாரங்களின்போது சுற்றாடல் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.