Header image alt text

மலர்வு 12/03/1963
உதிர்வு 30/07/2023
பண்டத்தரிப்பு, வடலியடைப்பு, கலட்டு வீதியை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் றொபின் (சின்னத்துரை குமாரதாசன்) அவர்கள் இனப்பற்றும், தமிழ் மக்களின் அரசியலில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தவர். கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவரான இவர் எளிமையும் ஆழ்ந்த தமிழ் தேசியப்பற்றும் பழகுவதற்கு மிக இனிய சுபாவத்தையும் இயல்பாகவே கொண்டிருந்தார்.

Read more

வற்றாப்பளை உதயசூரியன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 29.07.2024 இடம்பெற்றது. இதன்போது சிறார்களுக்கான பரிசுப் பொருட்களும், விளையாட்டு நிகழ்வினை நடாத்துவதற்கான ஒலிபெருக்கி, பந்தல், கதிரை உள்ளிட்ட பொருட்களும் கட்சியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, இந்த உறுதியை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இலங்கையர்களுக்கு இலவச விசா வழங்கியுள்ள நிலையில் அல்ஜீரியாவும் இலங்கை உட்பட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான பயண நடைமுறைகளை இலகுவாக்குவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியும் என அல்ஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த புதிய இலவச விசா கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு தாம் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பெஃப்ரல் அமைப்பு அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது. குறித்த திட்டங்களைத் தடுக்கும் வகையில் பெஃப்ரல் அமைப்பு செயற்படுவதாக சில தரப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் நிவாரண வேலைத்திட்டங்களில் அரசியல் தலையீடுகளை தவிர்க்குமாறே உயர்நீதிமன்றிடம் தங்களால் கோரப்பட்டுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. Read more

தேர்தல்கள் ஆணைக்குழு தற்சமயம் ஒன்று கூடியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் நலன்புரி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்டும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது. அரசாங்கத்தினால் அபிவிருத்தி மற்றும் நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அஸ்வெசும காணி உறுதிப்பத்திரம் வழங்கல் ஜனாதிபதி புலமைப்பரிசில் மற்றும் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அரச சொத்துக்களைப் பயன்படுத்துகின்றமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.