எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, இந்த உறுதியை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.