Header image alt text

31.07.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் காஸ்ட்ரோ (சவரிமுத்து வெள்ளிமயில்- முல்லைத்தீவு), தோழர் ஆனந்தபாபு (கிருஷ்ணகுமார்- திருகோணமலை) ஆகியோரின் 36ஆவது நினைவு நாள் இன்று….

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கரவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளின் செயற்பாடுகளில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து இதனை அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்களை www.election.gov.lk என்ற இணையத்தளம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் அஞ்சல் வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று அங்கு செல்வதற்காக வங்கியிலிருந்து 20 இலட்சம் ரூபாவை எடுத்துச் சென்ற இளைஞன் ஒருவர் முல்லைத்தீவு வவுனிக்குளம் பகுதியில் நேற்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆனந்தராசா சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். Read more