ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்களை www.election.gov.lk என்ற இணையத்தளம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் அஞ்சல் வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.