நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கரவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளின் செயற்பாடுகளில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும்இ முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவும்இ கட்சியின் பதில் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவும் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
மனுதாரர்கள் விடயங்களை உறுதிப்படுத்தாத காரணத்தால் குறித்த மனு நிராகரிக்கப்படுவதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.