எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து இதனை அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.