Header image alt text

அமரர் தோழர் போல் சத்தியநேசன் அவர்களுக்கான நினைவுப் பகிர்வு, அஞ்சலி என்பன The Willows Forest Road, IG6 3SL என்ற முகவரியில் 13.07.2024 சனிக்கிழமை காலை 9.30மணியளவில் இடம்பெற்றபோது எமது தோழர்களும் கலந்து கொண்டிருந்தனர் Read more

ஆழ்ந்த இரங்கல்கள்….

Posted by plotenewseditor on 14 July 2024
Posted in செய்திகள் 

ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் செலவினங்களுக்காக தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியை விடுவிக்க இயலுமென நிதியமைச்சின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, எதிர்வரும் 17ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகைதருமாறு நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் போது 50 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பட்டப்பின் படிப்பு நிறுவகம் தெரிவித்துள்ளது. நாளையும்(15) அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறுவகத்தின் சிரேஷ்ட தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

பென்ஸில்வேனியாவின் பட்லர் நகரில் நடைபெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் பிரசார கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனல்ட் ட்ரம்ப் இந்த கூட்டத்தில் உரையாற்றும் போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, டொனல்ட் ட்ரம்ப், அவரின் மெய்பாதுகாவளர்களால் மேடையில் இருந்து இடைநடுவில் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Read more

புளொட் அமைப்பு வருடந்தோறும் அனுஸ்டித்து வருகின்ற வீரமக்கள் தினத்தின் 35ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு சுவிஸ் நாட்டிலும் நடைபெற்றுள்ளது. செயலதிபர் அமரர் தோழர். உமாமகேஸ்வரன், கழகக் கண்மணிகள், அனைத்து அமைப்புக்களின் தலைவர்கள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்களை நினைவு கூர்ந்து சுவிஸில் நடைபெற்ற 35ஆவது வீரமக்கள் தின நினைவேந்தல் நிகழ்வானது, 13.07.2024 சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் (13.00) கேர்ளபிங்கன் 4563 4563 Gerlafingen எனும் இடத்தில் நடைபெற்றுள்ளது.

Read more

செயலதிபர் அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழா..

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 35வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இன்று (13.07.2024) காலை 09.30 மணியளவில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கழகத்தின் கொடி மாவட்ட அமைப்பாளர் தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Read more

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 35ஆவது நினைவு தினம் இன்று காலை (13.07.2024) வலிகாமம்-மேற்கு பிரதேசசபை வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவுருவச் சிலையின் முன்பாக இடம்பெற்றது.

Read more

13.07.1989ல் மரணித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளும் 35ஆவது வீரமக்கள் தின ஆரம்ப நாளும் இன்று….