Header image alt text

அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவை முன்னிட்டு லண்டனில் வசிக்கும் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது இன்று (11.07.2024) காலை கிளிநொச்சி விவேகானந்தநகர், பாரதிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டின்கீழான 50 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளார்.

Read more

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதி தபால் மூலம் அவர்களுக்கு பிரத்தியேக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பனாகொடையில் இன்று பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே இதனைக் குறிப்பிட்டார். பயங்கரவாத தொழிற்சங்கவாதிகளால் நாட்டின் பொதுச்சட்டம் சவாலுக்குட்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார். Read more

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்ட மாஅதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சபாநாயகரின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அரசியலமைப்பு பேரவையின் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். Read more

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைக்காடு பிரதேசத்திலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காரைக்காடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 20 ஆயிரம் T56 ரக துப்பாக்கி ரவைகள், 300 மிதிவெடிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு அமைய அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான சலுகைக் கடன் திட்டத்தை மீள வழங்குவதற்கு ஜெய்கா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, இலகுக் கடன் வேலைத்திட்டத்தின் கீழ் 170 பில்லியன் ரூபா ஜெய்கா நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளது. Read more

தமது பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய அதிபர்கள் தீர்மானித்துள்ளனர். தமது பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காததால் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக ரயில் நிலைய அதிபர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில் நிலைய அதிபர்கள் நேற்று(09) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 5 வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் பதவியுயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. Read more

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 2 சரத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள வருடங்களின் எண்ணிக்கையை திருத்தியமைப்பதற்காக அரசியலமைப்பு திருத்த சட்டமூலமொன்றை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யோசனை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று(09) முன்வைக்கப்பட்டுள்ளது.  அரசியலமைப்பின் 30 (2) சரத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

நேற்றும்(08) இன்றும்(09) கடமைக்கு சமுகமளித்த நிறைவேற்றுத்தரம் அல்லாத அனைத்து  அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வை வழங்குவதற்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்கு பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டு சான்றிதழை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read more

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு தெரிவித்து கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிஞ்சாம்பிட்டியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. Read more

பாராளுமன்ற உறுப்பினர்களின் சில உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பொதுமக்களின் நீதிமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். நீதிமன்றத்தின் ஒருசில நடவடிக்கைகளால் தமது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்திலும் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் தொடர்பிலேயே பிரதம நீதியரசர் இதனை அறிவித்துள்ளார். Read more