மாங்குளம் பனிச்சங்குளம் கலைமகள் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் கட்சியின் பொருளாளர் க. சிவநேசன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், முள்ளியவளை மேற்கு வட்டார பொறுப்பாளர் சஞ்சீவன், முன்பள்ளியின் முதன்மை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதன்போது கட்சியினால் பிள்ளைகளுக்கான பரிசுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தின 35ஆவது ஆண்டு நினைவுகள் ஜூலை 13ம் திகதிமுதல் ஜூலை 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கதிரவேலு சண்முகம் குகதாசன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் அவர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்பாக இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தற்போதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பதில் அத்தியட்சகர் பதவியிலிருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பொதுமக்கள் இவ்வாறு கண்டனம் தெரிவிக்கின்றனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை என்பன மூடப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் திகதி தொடர்பில் உயர் நீதிமன்றம் பொருட்கோடலை வழங்கும் வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தொழில்முயற்சியாளர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று(08) உத்தரவிட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா இன்று கடமைகளை பொறுப்பேற்றார். வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு மண்டபத்தில் பதிவாளர் நடராஜா ராஜவிசாகன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. புதிய துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டார்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், லண்டனில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்தவரும், எமது அமைப்பின் ஐக்கிய இராச்சியக் கிளையின் முன்னைநாள் பொறுப்பாளரும், லண்டன் நியூஹாம் பகுதியின் முன்னைநாள் கவுன்சிலருமான தோழர் போல் சத்தியநேசன் அவர்களின் திடீர் மறைவையிட்டு ஆழ்ந்த துயரடைந்தேன். மிக நீண்ட காலமாக கழகத்துடன் இணைந்து லண்டனில் வேலை செய்த அவரை, லண்டனில் நான் இருந்தகாலங்களில் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்திருந்தேன்.
07.07.1991இல் வவுனியா மரக்காரம்பளையில் மரணித்த தோழர் நிசார் (மீரா மொகைதீன் நிசார் – மடவளை) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுகள்…
இலங்கை கடற்பரப்பில் அடுத்த ஆண்டில் இருந்து சர்வதேச ஆய்வுக் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்படமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜப்பான் ஊடகமொன்றுக்கு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கத்திற்கு பல்வேறு நாடுகளுடன் வேறுபட்ட சட்டங்கள் காணப்பட முடியாது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும், ஐக்கிய இராச்சியக் கிளையின் முன்னைநாள் பொறுப்பாளரும், லண்டன் நியூஹாம் பகுதியின் முன்னைநாள் கவுன்சிலரும் யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவருமான, தோழர் போல் சத்தியநேசன் அவர்கள் இன்று (05/07/2024) லண்டனில் காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத் தருகின்றோம். யாழ். பரியோவான் கல்லூரியில் கல்விபயின்ற இவர், எண்பதுகளில், கழகத்தின் ஓர் அங்கமான தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் ( TRRO )த்துடன் இணைந்து புலம் பெயர்ந்து சென்ற ஆயிரக்கணக்கான எமது தேசத்து மக்களுக்கு பல்வேறு உதவிகளை அர்ப்பணிப்புடன் செயலாற்றிய உன்னதமான தோழராவார்.