Header image alt text

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் தான் என்பதை ஜனாதிபதி உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மேலும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட தீர்மானத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆதரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இன்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். பிரித்தானியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைகிறது. எனினும் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 30ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. Read more

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்தார். இந்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. Read more

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த மே 16 ஆம் திகதியன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விசாரணை மீண்டும் நாளை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தை தோண்டிய போது மனிதப் புதைகுழியொன்று அடையாளம் காணப்பட்டது. Read more

மத்தளை விமான நிலையத்தை முகாமைச் செய்யும் பொறுப்பினை ரஷ்யா கையேற்கவிருப்பதாக விமானச் சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்இ இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகி இருப்பதாகவும் தெரிவித்தார். 209 மில்லியன் டொலர்கள் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த விமான நிலையம்இ விமானப்போக்குவரத்து போதியளவில் இல்லாததன் காரணமாக, நட்டங்களை எதிர்நோக்கி இருந்தது. Read more

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனவே உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும். Read more

யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட பதில் அரச அதிபர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் (Dinesh Gunawardena) நியமனக் கடிதம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த நியமனக் கடிதங்கள் இன்று (03.07.2024) கையளிக்கப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் நீதிமன்றத்தினால் பொருட்கோடல் வழங்கப்படும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ள வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் உத்தர​வை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள செய்திச்சேவை தெரிவித்துள்ளது. அடிப்படை உரிமை மனுவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களப் பணியாளர்கள் சங்கம் நாளையதினம் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. சுங்கத்திணைக்களம் வருமான வரி திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றை இணைத்து ஒரே நிறுவனமாக மாற்ற முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.