தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த சம்பந்தன் அவர்கள், தந்தை செல்வா அவர்கள் முதல் இன்றைய தலைமுறையினர் வரை அனைத்துக் காலங்களிலும் கை கோர்த்துப் பயணித்த ஒரு தலைவராக திகழ்ந்தவர்.
தேர்தல் அரசியலில் ஈடுபடும் வாய்ப்புகள் பல தடவைகள் தந்தை செல்வா அவர்கள் மூலம் கிடைக்கப் பெற்றபோதும் அவற்றைத் தவிர்த்து வந்த அதேநேரம், தமிழ் மக்களால் நடாத்தப்பட்ட அறவழிப் போராட்டங்கள் பலவற்றிலும் முன்னின்று போராடியிருந்தார். Read more
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ளவேலையில்லாப் பட்டதாரிகள் இன்றைய தினம் இரு வேறு பகுதிகளில் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அரச துறையில் தங்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கக் கோரி இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது திருகோணமலை உட்துறைமுக வீதியிலிருந்து ஆளுநர் அலுவலகம்வரை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
லங்கா ஐஓசி நிறுவனம் ஒக்டேன் 100 ரக பெற்றோலை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் லங்கா ஐஓசி நிறுவனத்தின் தலைவர்கள் குழுவொன்று அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனுவைப் பரிசீலிப்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. தரமற்ற தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குறித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி அவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. இன்று நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண முன்வைத்த இந்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்ம சிறிசேன போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை பருவத்திலிருந்தே தொழில்முனைவு பற்றிய புரிதலும், பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மாற்றமடையும் புதிய கல்வி முறையின் மூலம், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பெற்றோருடன் கலந்தாலோசித்து எதிர்கால வாழ்க்கையைத் தெரிவு செய்ய வாய்ப்பளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமிழர் தரப்புச் செயற்பாட்டாளர்களில் வயதில் மூத்தவரும், முதிர்ந்த அனுபவம் கொண்டவருமான இரா. சம்பந்தன் அவர்கள், யுத்தத்தின் பின்னர், பெரும்பான்மையான காலப் பகுதியில், தமிழ்ச் சமூகத்தின் குரலாக, தென்னிலங்கை சமூகம் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அங்கீகாரம் பெற்றிருந்தார்.
01.07.1999இல் மரணித்த தோழர் சேகர் (மூக்கன் உதயகுமார்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…
கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை இன்று நிதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே, திறைசேரியின் ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் றொபேட் கப்ரோத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை சரியான திசையில் பயணிப்பதால் ஏனைய நாடுகள் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.