Header image alt text

தேர்தல்கள் ஆணைக்குழு தற்சமயம் ஒன்று கூடியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் நலன்புரி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்டும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது. அரசாங்கத்தினால் அபிவிருத்தி மற்றும் நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அஸ்வெசும காணி உறுதிப்பத்திரம் வழங்கல் ஜனாதிபதி புலமைப்பரிசில் மற்றும் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அரச சொத்துக்களைப் பயன்படுத்துகின்றமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

வவுனியா கோவில்புதுக்குளம் ஐயப்பன் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தபோது. Read more

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். நாமல் ராஜபக்ஷ தமக்கு அறிவித்தல் வழங்காமல் ஹோமாகமவில் பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். நாமல் ராஜபக்ஷ கட்சி ஒழுக்கத்தை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது போன்ற விடயங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என காவல்துறையினர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை மொட்டுச் சின்னத்தில் முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, குறித்த தினத்தில் அல்லது அதற்கு முன்னதாகக் கிடைக்கப்பெறும் வகையில் விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்குமாறு அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அஞ்சல் மூல விண்ணப்பங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி அஞ்சலிடப்பட்டால் அவை செல்லுபடியாகாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனால் நீதியமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அமலநாயகி இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு – கல்லடி பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு காலை 10 மணிக்குச் சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27.07.1983இல் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட காந்தீயத்தின் செயலாளராக செயற்பட்டு, ஏதிலிகள் குறித்த கழகத்தின் எண்ணங்களை செயல் வடிவமாக்கிய வைத்தியர் தோழர் இராஜசுந்தரம் மற்றும் தோழர்கள் ரொபேட் , சேயோன், மயில்வாகனம், சுதாகரன், அரபாத், அன்பழகன் ஆகியோரின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

28.07.2011இல் மரணித்த தோழர் கண்ணாடிச் சந்திரன் (கேசவன் ரவீந்திரன்) அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….