Header image alt text

திருகோணமலை பாலையூற்றுப் பகுதியில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவு அரைக்கும் இயந்திரம் ஒன்று இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பாலையூற்ற, முருகன் கோவிலடி ‘சக்தி’ மாதர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் கட்சியின் கனடா கிளைப் பொறுப்பாளர் தோழர் க.கந்தசாமி அவர்களின் நிதியுதவியில் சிங்கராசா தனூசியா என்ற குடும்பப் பெண்ணுக்கே மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சக்தி மாதர் சங்கத் தலைவி திருமதி வசந்தினி சந்திரன், தோழர்கள் பகீர், மோகன் ஆகியோரும், சக்தி மாதர் சங்கத்தினரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த வழக்குடன் தொடர்புடைய முன்னாள் வடமாகாணச் சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்துள்ள வாகன சாரதிகளுக்கு இவ்வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில் சாரதி அனுமதி அட்டைகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக நிரந்தர சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்க முடியாததிருந்ததாக அவர் தெரிவித்தார். Read more

டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலிகளை உடனடியாகப் பிரித்தானியாவுக்கு இடமாற்றுமாறு கோரப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லாம்மியினால் அதன் உள்துறை செயலாளர் யவெட் கூப்பருக்கு இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இந்தியப் பெருங்கடல் பகுதி ஆணையாளரின் எச்சரிக்கையான கருத்துக்களைத் தொடர்ந்து, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 நாட்களுக்கு மேலாக டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 சிறுவர்கள் உள்ளிட்ட 60 இலங்கை ஏதிலிகளின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளதாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான ஆணையாளர் அறியப்படுத்தியுள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். 76 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளும் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச்சென்றதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேவையுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தமது X தளத்தில் #CrushCorruption எனும் ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை ஜப்பான் அரசாங்கம் விடுவிக்கவுள்ளது. ஜப்பான் அரசாங்கம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என கனடா தொடர்ந்தும் கோருவதாகக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 41வது ஆண்டை நினைவுகூரும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 41 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் கொழும்பில் தமிழ் பொது மக்களின் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின. Read more

41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜூலை கலவரம் தொடர்பில் தமிழ் மக்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அரசாங்கத்தின் சார்பில் நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மன்னிப்பு கோரியுள்ளார். 1983ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி இலங்கை ஒரு மோசமான சம்பவத்தை எதிர்கொண்டது. நாம் அந்தக் காலத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை. Read more

தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றுவதை தடுத்து உயர்நீதிமன்றத்தினால் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த ஆணையை பிறப்பித்தது. தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 08 ​தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணைகளுக்கு அனுமதியளித்து இன்று இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

கறுப்பு யூலையின் 41ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை 23ம் திகதியாகிய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையிலான ஐந்து நாட்களாகும். வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது.

Read more