Posted by plotenewseditor on 23 July 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 23 July 2024
Posted in செய்திகள்
23.07.2008இல் மரணித்த தோழர் சுரேஸ் (மூக்கன் சுரேஸ்குமார்) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…Posted by plotenewseditor on 23 July 2024
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றியிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பதவித்தரம் இறக்கப்பட்டு வைத்திய அதிகாரியாக தற்காலிகமாக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக அவர் கடமையாற்றியிருந்த போது அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தார். எனினும் அவர் தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதாகத் தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சாவகச்சேரி கிளை உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர். Read more
Posted by plotenewseditor on 23 July 2024
Posted in செய்திகள்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். விடைத்தாள் மதிப்பீட்டிற்கான அனைத்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் பிரச்சினை தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 July 2024
Posted in செய்திகள்
இலங்கை தொழிலாளர்களுக்குக் குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனது ‘எக்ஸ்’ தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Posted by plotenewseditor on 22 July 2024
Posted in செய்திகள்
ஜனநாயகக் கட்சியை ஓரணியாகத் திரட்டி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்பை தோற்கடித்து வீழ்த்திக் காட்டுவோம் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் சூளுரைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பைடன் விலகியதுடன் கமலா ஹரிஸை முன்னிறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 22 July 2024
Posted in செய்திகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 35ஆவது வீரமக்கள் தினம் பிரான்சில் இன்று தோழர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு தோழர்களின் உருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிக்வில் தோழர்கள் ஜெயந்தன் சசி முல்லை, சசி வவுனியா, தயா மட்டு, தயா வவுனியா, உதயன், தீபன், சுதா, ரங்கா, யூட் யேர்மன் மற்றும் கயூரன்்ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள.Posted by plotenewseditor on 22 July 2024
Posted in செய்திகள்
புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கும், தமிழ் மக்கள் பொதுச்சபை பிரதிநிதிகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் யாழ் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டது. மேற்படி இரு தரப்பினரின் இணைவில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளது.Posted by plotenewseditor on 22 July 2024
Posted in செய்திகள்
தேசிய கண் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர் உடனடியாக பதவி நீக்கப்படாவிட்டால் நாளை (23) காலை 8 மணிமுதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வைத்தியரின் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகள் காரணமாக அவரை பதவி நீக்குமாறு கோருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 July 2024
Posted in செய்திகள்
கண்ணாட்டி கணேசபுரம் கிராமத்தில் உள்ள திருநாவுக்கரசு முன்பள்ளிச் சிறார்களுக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அங்குள்ள குழாய்க் கிணறுக்கான மோட்டர் இயந்திரம் மற்றும் அதற்குரிய வயர் உள்ளிட்ட உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டது. கனடாவில் வசிக்கும் செல்வி. அஷ்ரா குலசேகரம் அவர்களின் 10வது பிறந்தநாளை (21.07.2024) முன்னிட்டு மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.