சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிட்டபடி நாளை ஆரம்பிக்கப்படும் என ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வேதன முரண்பாடு தொடர்பில் கடந்த 9ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளது. Read more
இலங்கைத் தரப்பிலிருந்து காணிகள் விடுவிக்கப்படாமையின்ர காரணமாகவே இந்திய வீடமைப்பு திட்டம் தாமதமடைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அதற்கான வழிவகைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த தூதுக்குழு இலங்கை வரவுள்ளது. எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த தூதுக்குழு நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டம் தொடர்பில் மதிப்பாய்வை மேற்கொள்ளாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துஇ ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்படி தொழில் செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில்இ கல்வி அமைச்சர் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் நேற்று கலந்துரையாடியிருந்தது. இந்த நிலையில்l பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையினால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்படி தொழில் செய்யும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடந்த நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சகராக பணியாற்றிய இராமநாதன் அர்ச்சுனா அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் சில முறைகேடுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார். கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று அவர் கற்பிட்டி காவல்துறையில் சட்டத்தரணியுடன் சரணடைந்த போது கைது செய்யப்பட்டதாகக் கற்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அவரைக் கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18.07.2024 மாங்குளம் கிழவன்குளம் அலைமகள் முன்பள்ளி வற்றாப்பளை உதயசூரியன் முன்பள்ளி என்ற இரண்டு முன்பள்ளிகளையும் சேர்ந்த 50 மழலைகளுக்கு விளையாட்டு போட்டியை முன்னிட்டு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்தப் பரிசுப்பொருட்கள் ஜேர்மனியில் லூட்விக்ஸ் பேர்த் நகரில் வசிக்கும் பவுர்ணியா பவானந் அவர்களின் 27வது பிறந்தநாளை கொண்டாடும் முகமாக அவர்களது குடும்பத்தவர்களால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்டது. இவ்வைபத்தில் கரைதுறைப்பற்று முன்னாள் தவிசாளர் கனக தவராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் முள்ளியவளை மேற்குப் பொறுப்பாளர் சஞ்சை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மூதூர் கங்கை பாலத்திலிருந்து பஸ்ஸொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் வரை காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை சென்றவர்கள் பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளானதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். பஸ் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 54 பேர் அதில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிங்குரக்கொட உள்ளூர் விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்தப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில்இ நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
22ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்பின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 19ம் திருத்தச் சட்டத்தின் 83ஆம் உறுப்புரையின் (ஆ)பிரிவில் திருத்தங்களை ஏற்படுத்த அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, குறித்த சட்டமூலம் வரையப்பட்டிருந்தது. இதனை வர்த்தமானியில் பிரசுரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கிய இருந்த போதும், ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரையில் அவ்வாறு பிரசுரிக்காதிருக்க நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவுறுத்தியிருந்தார்.