எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விடயங்களை முன்வைக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொழும்பு 10 – டி.பி ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தை கடந்த 5 ஆம் திகதி பூட்டி வைத்தமை தொடர்பிலேயே மாளிகாகந்த நீதவான் லோச்சனீ அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். Read more
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக இன்று பெரும்பாலானோர் வருகை தந்ததால் பத்தரமுல்லை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இன்றைய தினத்தை முன்கூட்டியே பதிவு செய்யாமல் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு பலர் வருகை தந்ததால் இந்நிலைமை ஏற்பட்டது. விண்ணப்பதாரர்களின் நலனுக்காகவும் செயல்முறையை சீரமைக்கவும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை குடிவரவு – குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கிணங்க இன்று முதல் கடவுச் சீட்டு வழங்கும் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் எங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் விடயம் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் 16.07.2024 மாலை இடம்பெற்ற வீரமக்கள்தின நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகப் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் குறித்த சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத் துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் பாதிப்படைந்த சிலர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரரால் சமர்ப்பிக்கப்பட்ட மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வது தொடர்பாக புதிய சட்டம் இயற்ற வேண்டும் எனத் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைப்பேசிகளை எடுத்துச் செல்வதைத் தடுக்க புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது. அது தொடர்பில் திரைப்படக் கூட்டுத்தாபனம் தலையிட்டுத் தேவையான சட்ட ஏற்பாடுகளைத் தயாரிக்க வேண்டுமென அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவைப் பிறப்பிக்குமாறு அந்த மனுவின் ஊடாக கோரப்பட்டுள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் (16.07.2024) மாலை 4.00அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க. சந்திரகுலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.
தோழர் போல் அவர்களின் இறுதி நிகழ்வு லண்டனில் இன்று நடைபெற்றுள்ளது. இறுதி நிகழ்விலும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைதியற்ற வகையில் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, கூட்டத்திலிருந்த ஒருவர் கலந்துரையாடலை பேஸ்புக் வழியாக நேரலையில் ஒளிபரப்பியிருந்தார்.