ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்ரூnடிளி;சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்ட அவர், தேர்தலை மிகக் குறுகிய காலத்திற்குள் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளால் ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனுவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி செயலதிபர் அமரர் தோழர் க. உமாமகேஸ்வரன் அவர்களின் திருவுருவச்சிலை வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்திக்கு அருகாமையில் இன்று மாலை 3.00 மணியளவில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கட்சியின் உயர்பீட மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள், ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள்,
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டாலும் மக்கள் கருத்துக்கணிப்பை நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க வேண்டிய சூழ்நிலை ஜனாதிபதிக்கு உருவாகுமென சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் திகதியை இம்மாத இறுதிக்குள் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க இன்று(16) உத்தியோகப்பூர்வமாக தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று நள்ளிரவுக்குப் பின்னர் கிடைக்கவுள்ள நிலையில் இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புளொட் அமைப்பின் 35ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று (16.07.2024) செவ்வாய்க்கிழமை காலை 10.00மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயலாளர் தோழர் பற்றிக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது.
16.07.1999இல் வவுனியாவில் மரணித்த தோழர் சபேசன் (டுமால்) (சபாரட்ணம் பாஸ்கரன்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுகள்….
வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்திக்கு அருகாமையில் இன்று மாலை 3.00 மணியளவில் நடைபெறும் செயலதிபர் அமரர் தோழர் க. உமாமகேஸ்வரன் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா, அதனைத் தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்வு என்பவற்றை இந்த முகநூல் ஊடாக நேரலையில் காணலாம்…
தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் குழுவொன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நாளை செல்லவுள்ளது. குறித்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வடக்கு சுகாதாரத்துறையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.