அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டம் தொடர்பில் அவர்களை மீண்டும் தௌிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

அடுத்த வாரமும் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதனிடையே, அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களின் பிரதானிகளையும் கொழும்புக்கு அழைத்து தேர்தல் சட்டம் தொடர்பில் தௌிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.