கட்டுநாயக்க விமான நிலையத்தில்இ கடந்த 5 வருடங்களில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 181 போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. எல்லை கண்காணிப்பு பிரிவின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை வெளியிட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. Read more
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கடமைகளுக்காக 50,000 காவல்துறை உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகக் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை முன்னதாகவே கணக்கிடப்பட்டு வருவதாக ஜனாதிபதித் தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி வாக்குப்பெட்டிகளைக் கொண்டு செல்வது உள்ளிட்ட தேர்தல் கடமைகளுக்காக காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அண்மையில் சர்ச்சைக்குள்ளான வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மன்னார் – தம்பன்னை குளத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று மன்னார் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். இதன்போது அங்குள்ள வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து அவருக்கு எதிராக மன்னார் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும்இ ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவிற்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி உரிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். இதன்பிரகாரம், இது தொடர்பான திருத்தங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேற்று வரையில் பதினான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக போட்டியிடுவதற்கு எட்டு வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட ஒரு வேட்பாளரும், சுயேட்சையாக போட்டியிட ஐந்து வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 14ம் திகதி நண்பகல்வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.