ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் முன்னணிஇ தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இன்று ஹட்டனில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார். Read more
அம்பாறை – இங்கினியாகலவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். கராட்டுகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியத்த பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீதே முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைக் கையாள்வது தொடர்பில் கூகுள் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் சமூக ஊடகங்கள் ஊடாக தவறான தகவல்களைப் பகிர்வதற்கு எதிராக செயற்பட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குவைத்தில் கைதான 24 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த 24 இலங்கையர்களும் கடந்த 2ஆம் திகதி அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அக்கரையில் நாம்’ என்ற அமைப்பின் குவைத் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் குறித்த இலங்கையர்கள் கைதானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி இசைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் இசைக்கலைஞர்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.