Header image alt text

05.08.1999இல் வவுனியாவில் மரணித்த தோழர் கண்ணாடிக் குமார் (ஆறுமுகம் உதயகுமார்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 60 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அரச அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். Read more

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியுள்ளார். அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து பதவி விலகிய அவர், நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஹசீனாவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் வலுப்பெற்றுள்ளன. நாட்டின் நீண்டகால ஆட்சியாளர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமென்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்து மாணவ தலைவர்களால் சிவில் ஒத்துழையாமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவர் நாட்டின் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும், வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லையென அந்த ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. Read more

அடுத்த மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக 1 கோடியே 71 இலட்சத்து 40,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, குறித்த மாவட்டத்தில் 18 இலட்சத்து 81,129 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை இன்று உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்க முடியுமெனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு இதுவரை 14 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. 08 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் மற்றுமொரு அரசியல் கட்சியும் 05 சுயேட்சை வேட்பாளர்களும் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். Read more