ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 99 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு இதுவரை 68 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு இதுவரையில் 31 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும்இ எதிர்க்கட்சித் தலைவியுமான காலிதா ஸியாவை சிறையிலிருந்து விடுவிக்க பங்களாதேஷ் ஜனாதிபதி முகம்மட் சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளதாக பங்களாதேஷின் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று பிரதமர் பதவியை இராஜினாமா செய்து சில மணிநேரங்களில் நாட்டை விட்டு வெளியேறினார். ஷேக் ஹசீனாவின் வலுவான எதிர்ப்பாளராகக் கருதப்படும் 78 வயதான காலிதா ஸியா நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவியாக உள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை எதிர்வரும் 09 ஆம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கையளிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் காலம் நேற்று(05) நள்ளிரவுடன் நிறைவடைவிருந்த போதிலும் அந்த காலஎல்லை தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 50,000க்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.