மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (02) இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடமையிலிருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது. Read more
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர் வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.
எண்ணங்களின் மூலம் நவீன தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதே மூளையில் பொருத்தப்படும் நியூராலிங்க் சிப்பின் நோக்கம். எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம்இ மனித மூளைக்கும் கணினிக்குமான தொடர்பை உருவாக்க மின்னணு சாதனமான ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த மின்னணு சாதனத்தை மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகின்றது. சில வருடங்களுக்கு முன்னர்இ குரங்குகளின் மூளையில் சிப் பொருத்தப்பட்டு நியூராலிங்க் நிறுவனம் சோதனை செய்திருந்தது. தற்போது மனித மூளையில் சீப்பைப் பொருத்தி ஆய்வு செய்து வருகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த அறிவிப்பை விடுத்தார். ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான நிகழ்வு, பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஸ, உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த கப்பல் சேவையானது பல்வேறு காரணங்களினால் இடை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் இந்தக் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சிவகங்கை கப்பல் நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார். அத்துடன் நாளைய தினம் இந்த கப்பல் சேவைக்கான சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.