Header image alt text

09.08.2022இல் மன்னாரில் மரணித்த தோழர் மரியான் (தீயோகு மரியதாஸ் – பள்ளக்கமம்) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுகள்….

09.08.2022இல் வவுனியாவில் மரணித்த தோழர் காண்டீபன் (கணபதி கேசவப்பிள்ளை – மூதூர்) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுகள்….

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 157 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு இதுவரை 102 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு இதுவரையில் 55 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கானஇ கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 5ஆம் திகதியுடன் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில் அது இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வரையில் 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். ஏனையவர்களில் ஒருவர் அரசியல் கட்சி சார்பாகவும்இ ஏனைய 13 பேர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்தும் களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை கட்சியின் பொதுச்செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தினார். இதேவேளை, மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோவுக்கு உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை உடனடியாக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். Read more

பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணாயக்கார, ஹரின் பெர்னாண்டோவை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டரீதியானதும் சரியானதும் என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தம்மை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டவிரோதமானது எனவும் அந்த தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறும் கோரி அமைச்சர்களான மனுஷ நாணாயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். Read more