Header image alt text

துயர் பகிர்வு!

Posted by plotenewseditor on 11 August 2024
Posted in செய்திகள் 

அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகளோடு, நாமும் இத்துயரினைப் பகிர்ந்து கொள்கிறோம்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காகத் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குகின்ற தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் 7 சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இதன் ஜனாதிபதி பொது வேட்பாளராக பா. அரியநேத்திரனை நியமிப்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து பிரதான வேட்பாளர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமையவே யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானம் எட்டப்படும் என தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். Read more

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார். துறைமுக அதிகார சபையின் தலைவருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. Read more

எகிப்திய தலைநகர் கெய்ரோவில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அந்த நாட்டின் வெளிவிகார அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த வருடம் கொழும்பில் இடம்பெற்ற வெளியுறவு அமைச்சர்கள் மட்ட இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனை கூட்டத்தின்போதான இருதரப்பு ஒத்துழைப்பு வழிமுறைகளையும் எகிப்திய வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலட்டி இதன்போது பாராட்டியுள்ளார். Read more