Header image alt text

13.08.1992இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் காந்தன் (பூபாலப்பிள்ளை உமாகாந்தன் – பனங்காடு), ரகுவரன்(கணபதிப்பிள்ளை வரதராஜா – குருமண்வெளி) ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… Read more

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரியராஜ் சிந்துஜா என்ற பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கோரி இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உரிய தீர்வு கிடைக்கும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். Read more

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார். அதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ஹூனுப்பிட்டி கங்காராம விகாரை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் மற்றுமொரு வேட்பாளர் தமது கட்டுப்பணத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவில் செலுத்தியுள்ளார். இதேவேளை கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக் கோரல் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறவுள்ளது. Read more

20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து விபரங்களை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாராளுமன்றம் கூறியுள்ளது. Read more

இலங்கைக்காக பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் சைத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாலஸ்தீனத்தின் காஸாவில் இடம்பெறும் படுகொலைகளுக்கு எதிராக குரல் எழுப்பவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிக்கவும் அனுர குமாரவினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு இதன்போது அவர் நன்றி தெரிவித்துள்ளார். Read more

கிராம உத்தியோகத்தர்கள் நேற்று ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளிலுள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. தமது யோசனைகளை உள்ளடக்காமல் கிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பினை வர்த்தமானியில் வௌியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஜகத் சந்த்ரலால் தெரிவித்துள்ளார். Read more