Header image alt text

14.08.1983இல் கொல்லப்பட்ட தோழர் ஒபரோய் தேவன் (குலசேகரம் தேவசேகரம்) அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த ‘செஞ்சோலை’ சிறுவர்கள் இல்ல வளாகத்தில், 2006 ஒகஸ்ட் 14ஆம் திகதி அரச படையால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் உயிரிழந்த 53 மாணவர்கள் உட்பட 61 பேரது 18ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதைத் தடுத்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஆர்.எஸ்.பீ.ரணசூரிய இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க செயற்படாமை காரணமாக அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு அவர் தகுதியற்றவர் என உத்தரவிடுமாறும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பிற்கான தினங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாவட்ட செயலக, தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாருக்காக எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய அரச ஊழியர்கள் எதிர்வரும் செப்டம்பர் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பை மேற்கொள்ளலாம் என  அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய மேலும் 42 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் தேர்தல் சட்டம் மீறல் தொடர்பான 37 முறைப்பாடுகள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று வரை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 408 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தேர்தல் சட்டம் மீறல் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலைத் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ். ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நாளாந்த அடிப்படை வேதனமாக 1350 ரூபாவும் உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1700 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் காணப்படுமாயின் அதற்கான காரணங்களுடன் எதிர்வரும் 28ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. Read more