Header image alt text

உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக தொடர்ந்து பேணும் கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. சமீபத்திய மீளாய்வின் படி விடுதலைப் புலிகளின் மீதமுள்ள உறுப்பினர்கள் சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் வலையமைப்பைக் கொண்டிருப்பதாக கனடா கூறுகிறது. விடுதலைப் புலிகள் சார்பாக நிதி திரட்டுவதன் மூலம் உலகத் தமிழர் பேரவை தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கனடா குறிப்பிடுகிறது. Read more

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நாளை (16) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது. இந்தநிலையில் கடந்த 10ஆம் திகதி ‘சிவகங்கை’ பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதற்கமைய அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது. Read more

இன்று முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் அஜித். கே. திலகரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய கல்விசாரா சேவை கொள்கைகளை செயற்படுத்துவதாக கல்வியமைச்சர் வாக்குறுதிகளை வழங்கியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கல்வி அமைச்சருடன் பல தடவைகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும் அதிகாரிகள் இதனை செயற்படுத்துவதற்கு தாமதித்து வருகின்றனர். Read more

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று(15) காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதற்கான ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு காலை 9 மணி முதல் முற்பகல் 11.30 வரை சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் நேற்று(14) நண்பகலுடன் நிறைவடைந்திருந்தது. Read more