Header image alt text

உறுமய காணி உரித்து வழங்கும் வேலைத்திட்டத்தை இன்னும் இரண்டு வருடங்களில் நிறைவுறுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சல்காது மைதானத்தில் இன்று இடம்பெற்ற முதலாவது இயலும் ஸ்ரீலங்கா தேர்தல் பிரசார நிகழ்வில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காணி வழங்கலுக்காகப் பிரத்தியேகமானதொரு அதிகார சபை உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். Read more

கனடாவின் பிரம்டன் நகரில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி என்ற நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கனடாவில் வாக்குவங்கி அரசியலுக்காகத் தொடர்ந்து பரப்பப்படும் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான விடயங்களை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். Read more

ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவொன்றை வழங்குவது தொடர்பாக சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளரினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத கொடுப்பனவை ஒக்டோபர் மாத கொடுப்பனவுடன் வழங்கவுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு, திறைசேரி மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகிய பிரிவுகளுக்கு குறித்த சுற்றறிக்கையின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. Read more

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார செலவுகளைக் கண்காணிக்கும் வகையில் இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்திற்கு ‘வோட் மணி மீற்றர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தின் வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த இணையத்தளம் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் மற்றும் பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட ஆறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளினால் உருவாக்கப்பட்டுள்ளது.