Header image alt text

18.08.2001இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் குட்டி (செம்பாப்போடி .மேகநாதன்- திமிலைதீவு) அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட ஐந்து முன்பள்ளிகளின் 80 சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களும், எட்டு ஆசிரியர்களுக்கான நினைவுப் பரிசில்களும் பிலக்குடியிருப்பு முன்பள்ளிக்கு ஒரு வெண்பலகையும் வழங்கப்பட்டது. U.K லிவர்பூல்-இல் வசிக்கும் திரு. திருமதி டினேஸ் நிஷா தம்பதிகளின் செல்வப் புதல்வி (தோழர் வேந்தனின் பேத்தி) செல்வி. ஹன்சியாவின் 7ஆவது பிறந்தநாளை (17.08.2024) முன்னிட்டு இந்நிகழ்வு இடம்பெற்றது.

Read more

இணைந்த வடகிழக்கில் தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காகத் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். முள்ளியவளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்ற பா.அரியநேத்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் தர்மலிங்கம் சித்தார்த்தன்இ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றிக்காகப் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் பொதுச்சுடர் ஏற்றிய பின்னர் ஜனாதிபதித் தேர்த்தலுக்கான முதலாவது பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 519 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேய இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 503 முறைப்பாடுகளும் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. Read more

கிராம உத்தியோகத்தர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் மற்றும் கறுப்பு வாரம் இன்றுடன் நிறைவடைவதாக கிராம உத்தியோயகத்தர்கள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதிகாரிகளுக்குத் தேவையான வகையில் தமது சேவை திருத்தி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாக எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12ஆம் திகதி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. Read more