முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட ஐந்து முன்பள்ளிகளின் 80 சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களும், எட்டு ஆசிரியர்களுக்கான நினைவுப் பரிசில்களும் பிலக்குடியிருப்பு முன்பள்ளிக்கு ஒரு வெண்பலகையும் வழங்கப்பட்டது. U.K லிவர்பூல்-இல் வசிக்கும் திரு. திருமதி டினேஸ் நிஷா தம்பதிகளின் செல்வப் புதல்வி (தோழர் வேந்தனின் பேத்தி) செல்வி. ஹன்சியாவின் 7ஆவது பிறந்தநாளை (17.08.2024) முன்னிட்டு இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் பொருளாளர் க. சிவநேசன்(பவன்), கட்சியின்இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், மயூரன், சஞ்ஜி, ரூபன், வற்றாப்பளை கானகர் மகளிர் அமைப்பு தலைவி மரியநாயகி (பொனிற்றா), கட்சியின் வற்றாப்பளை செயற்பாட்டாளர் சி. வன்னியசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
 